5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்த ஒப்புதல் அளிக்குமாறு பைஸர் நிறுவனம் அமெரிக்க அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பைஸர் நிறுவனம் தரப்பில், “5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்த அமெரிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். இது தொடர்பாக உணவு மற்றும் மருத்துவத் துறைக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளோம். இதுவரை எங்கள் நிறுவனம் 2,000க்கும் அதிகமான 5 - 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க உணவு மற்றும் மருத்துவத்துறை குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசிகள் ஏற்றதா என்பதை விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பான விவாதம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
முன்னதாக, கனடா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளே முதன்மையானதாகப் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.
» உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்று இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் புதிய வரலாறு
» 30 ஆண்டுகளுக்குப் பிறகும் 17.5% தான்; ஓபிசி சிறப்பு ஆள்தேர்வு வேண்டும்: ராமதாஸ்
உலகம் முழுவதும் 23 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
13 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago