பாரீஸில் நடந்த ஃபேஷன் ஷோவில் மாடல்கள் நடந்து கொண்டிருக்கும்போது பெண் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஒருவர் நடுவில் சென்று காலநிலை மாற்றத்துக்கு எதிரான வாசகத்தை தாங்கியபடி நடந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ பாரீஸில் லூயி வுய்ட்டன் பேஷன் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது, சுற்றுச்சூழல் அமைப்பான பூமியின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பெண் *(சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்) ஒருவர் மாடல்களுக்கு இடையே சென்று ‘அதிக நுகர்வு அழிவை தரும்’ வாசகத்தை ஏந்தியபடி நடந்து சென்றார். உடனே அந்நிகழ்ச்சியின் காவலர்கள் அப்பெண்ணை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அகற்றினாகள்” என செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் அப்பெண் காவலர்களால் வெளியேற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும் அப்பெண் காவலர்களால் வெளியேற்றப்பட்டவிதம் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
» ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி: பிரதமர் மோடி திட்டவட்டம்
» உனக்கான சிறப்பான காலம் காத்திருக்கிறது: ஷாரூக் கான் மகனுக்கு ஹ்ரித்திக் ரோஷன் ஆதரவு
காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.
எனவே, உலக வெப்பமயமாக்கலைத் தடுக்க, வளர்ந்த நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago