சீனாவுடன் அமெரிக்கா போர் புரியும்: ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

சீனாவுடன் அமெரிக்கா போர் புரியும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு எதிர் மனப்பான்மையுடனே கடந்த சில வருடங்களாகக் கடந்து வருகிறது. வர்த்தகம், கரோனா வைரஸ் தொற்று, சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் சீன ராணுவ நகர்வுகள் மற்றும் மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இரு நாடுகளும் தற்போது கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், உலக வர்த்தக சந்தையில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜனநாயகக் கட்சி தலைமையில் சீனாவுடனான உறவு குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் பேசும்போது, “தேர்தல் மோசடி செய்யப்பட்டதால், அமெரிக்கா இப்போது பலவீனமான மற்றும் ஊழல் நிறைந்த தலைமையைக் கொண்டிருக்கிறது. இதனால் சீனா அமெரிக்காவை மதிப்பதில்லை. சீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய விவகாரத்தை ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தலிபான்களிடம் அமெரிக்கா சரணடைந்துவிட்டதாக அவர் கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்