ஜம்மு காஷ்மீரில் பாக். ஆதரவு தீவிரவாதிகள் அதிகரிப்பு: ஆப்கனில் தலிபான் ஆட்சிக்கு வந்தபின் மாறும் நிலை

By ஏஎன்ஐ

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபின், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் எண்ணிக்கை அதிகரிப்பது இதுதான் முதல்முறையாகும்.

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஆதரவு தீவிரவாதிகள், ஹக்கானி நெட்வொர்க்குடன் இணைந்து ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியுள்ளனர் என்று நிக்கி ஏசியா செய்தி வெளியிட்டதாக ஐரோப்பிய யூனியன் டுடே தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்திலிருந்து ஏறக்குறைய 50 தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தானை ஒட்டிய பழங்குடியினர் பகுதியிலிருந்து புறப்பட்டு, ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடமாட்டம், செயல்பாடுகள் உச்ச கட்டத்தில் இருந்தது. ஆனால், அதன்பின் மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க, நடவடிக்கை எடுத்தது, மற்றும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றால் தீவிரவாதிகள் நடமாட்டம் குறைந்திருந்தது.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் அமைப்பு கைப்பற்றியதிலிருந்து ஏராளமான பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவிய பகுதிகளில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதில் ஆப்கானிஸ்தான் ஆட்சி செய்யும் தலிபான்களுக்கு லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் உதவமாட்டார்கள்.

ஆனால், தலிபான்களுடன் ஆட்சியில் பங்கேற்றுள்ள ஹக்கானி நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறார்கள். தலிபான்களுக்கு உதவும் எண்ணத்தில் இல்லாத இரு தீவிரவாத அமைப்புகளும் இந்தப் பிராந்தியத்தில் அதிகமாக இருக்கிறார்கள் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்