உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று பரவும் வீதமும், இறப்பும் 10% குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ கடந்த வாரத்தில் கரோனா பரவலும், அதனால் ஏற்படும் இறப்பும் உலக அளவில் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் 30 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். கடந்த வாரத்தில் கரோனா பரவும் வீதமும், இறப்பும் 10% குறைந்துள்ளது. ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் கரோனா பரவும் வீதம் குறைந்துள்ளது. மாறாக ஆப்பிரிக்காவில் அதிகரித்துள்ளது. ”என்றார்.
மேலும், சமூக இடைவெளியும், தடுப்பூசியுமே கரோனா பரவலை தடுக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசியை செலுத்த பல்வேறு உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில்,
» சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
» அஸ்வினின் செயல் அவமானம்: மோர்கனுக்கு ஆதரவாக ஷேன் வார்ன் பாய்ச்சல்
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.
உலகம் முழுவதும் 23 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago