கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு சிங்கப்பூரில் மக்கள்தொகை சரிவு

By செய்திப்பிரிவு

சிங்கப்பூர் மக்கள்தொகை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது.

கரோனா காரணமாக சிங்கப்பூரில் பொருளாதார மந்த நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்வியலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வருடாந்திர மக்கள்தொகை அறிக்கையை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது.

அதில், “சிங்கப்பூரின் மக்கள்தொகை 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஜூன் மாத நிலவரப்படி நாட்டின் மொத்த மக்கள்தொகை கடந்த ஆண்டை விட 4.1 % குறைந்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் நிரந்தரக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 6.2 சதவீதம் குறைந்துள்ளது.

மற்ற நாடுகளைப் போல சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைந்தும், வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் தற்போதைய மக்கள்தொகை 59 லட்சம் ஆகும். மக்கள் தொகை சரிவைத் தொடர்ந்து கரோனா காலத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்தது.

கரோனா பாதிப்பு

சிங்கப்பூரில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 பேர் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

7 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்