கரோனா தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியைப் பரிந்துரை செய்துள்ளன. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் ரோசெல்லா வெலன்ஸ்கி கூறும்போது, “கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எம்மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுமோ அதே மாதிரியான மிதமான பக்கவிளைவுகளே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் ஏற்படுகிறது.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 71% பேருக்கு ஊசி போட்ட இடத்தில் வலி உள்ளது. 56% பேருக்குச் சோர்வும், 43% பேருக்குத் தலைவலியும் ஏற்படுகின்றன.
28% பேருக்குத் தங்களது அன்றாடச் செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுகிறது.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.1% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
» 5 தமிழ் வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி
» கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளோம்: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.
உலகம் முழுவதும் 23 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago