ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் பகுதியில் தலிபான்கள் எதிர்ப்புப் படையில் இருந்த போராளியின் குழந்தையைத் தலிபான்கள் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கனில் ஜனநாயகம் நிலை நாட்டப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில், நாளுக்கு நாள் அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட நால்வரைக் கொன்று பொதுவெளியில் தலிபான்கள் தூக்கிலிட்டனர்.
இந்த நிலையில் பஞ்ச்ஷிர் பகுதியில், தலிபான்கள் எதிர்ப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த போராளியின் மகனைத் துப்பாக்கியில் தலிபான்கள் சுட்டுக் கொன்றனர். சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கன் மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் ஆப்கானிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இருப்பினும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தலிபான்கள் கட்டவிழ்த்துள்ளனர்.
» விருப்பமுள்ள நிறுவனங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு உதவலாம்: வரிவிலக்கு உண்டு
» ‘‘நான் ஏற்கெனவே சொன்னேன்’’- பெயர் சொல்லாமல் சித்துவை கிண்டல் செய்த அம்ரீந்தர் சிங்
மேலும், கைகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் எனவும், தலிபான்கள் தலைவர் முல்லா நூருதீன் துராபி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago