அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கக்கூடிய 65 வயதைக் கடந்தவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக உள்ளவர்களுக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி (பூஸ்டர்) போட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் பொது சுகாதாரத் தேவைகளுக்குச் சிறந்த சேவையை வழங்க முடியும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஜோ பைடன், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் பூஸ்டர் (மூன்றாவது) தடுப்பூசி போட்டுக் கொண்டார். சுகாதார அதிகாரிகளின் அறிவுரைப்படி பைடனுக்கு பைஸர் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
» பிளஸ் 2 துணைத் தேர்வு: அக்.4 முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
» புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (செப் - 27 முதல் அக்டோபர் 3ம் தேதி வரை)
ஜோ பைடன் கூறும்போது, “நான் 65 வயதைக் கடந்துவிட்டேன். ஆனால், என்னைப் பார்த்தால் அப்படித் தெரியாது” என்று கூறினார்.
அமெரிக்கா தனது குடிமக்களில் 75% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்டா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்தது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 600 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago