ஆப்கனில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஒடுக்கப்படுவார்கள் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானில் விரைவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று அவர்கள் தலிபான்களுக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை தொடர்வார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தலிபன்களின் செய்தித் தொடர்பாளர் பிலால் கரீமி கூறும்போது, “ ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இல்லை. அவர்கள் ஆதிக்கம் செய்ய நினைத்தால் நிச்சயம் ஒடுக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் ஆதிக்கம் இருந்தது. எனினும் அவர்கள் அமெரிக்க படையாலும், தலிபான்களாலும் ஒடுக்கப்பட்டார்கள்.
» ராமநாதபுரத்தில் இயற்கையாக வளரும் உகாய் மரங்கள்; மருத்துவ குணமுள்ளவை
» ஒரு பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றோர் படிக்க 2 ஆண்டுக்கு உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு
இந்த நிலையில் மீண்டும் ஐஎஸ் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளனர். அவர்கள் பதவி ஏற்றது முதலே பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் அந்நாட்டில் அதிகரித்து வருகின்றன.
அண்மையில் யுனெஸ்கோ, யுனிசெஃப் போன்ற அமைப்புகள் ஆப்கனில் பெண்கள் பயிலும் பள்ளிகளை மூடுவது கல்விக்கான அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று கண்டனத்தை தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago