அமெரிக்காவில் இன்று நடைபெறும் குவாட் கூட்டணி தலைவர்கள் மாநாட்டில், தடுப்பூசிகள் முதல் சட்டவிரோத மீன்பிடித்தல் வரை பல்வேறு விஷங்கள் விவாதிக்கப்படுகிறது.
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு குவாட் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2017-ம்ஆண்டு இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா இணைந்தது.
முதல்முறையாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு கடந்த மார்ச் மாதம் காணொலி மூலம் நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.
கரோனா தடுப்பூசி, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், குவாட் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
» நாட்டு நலப் பணித் திட்ட விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்
» டெல்லி நீதிமன்ற அறையில் ரவுடி சுட்டுக்கொலை: வழக்கறிஞர் உடையில் வந்த ‘துப்பாக்கி ஆசாமி’களும் பலி
ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
குவாட் மாநாட்டில் கரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். இந்த மாநாடு குறித்து அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தடுப்பூசிகள் முதல் சட்டவிரோத மீன்பிடித்தல் வரை பல்வேறு விஷங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் முக்கிய சவால்கள் இந்தோ-பசிபிக் பகுதியில் நிகழும் என்பதை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் புரிந்துகொண்டுள்ளார்.
உச்சிமாநாட்டில், குவாட் தலைவர்கள் இந்தோ-பசிபிக் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்த விரும்புகின்றனர். இது ஒரு பிராந்திய பாதுகாப்பு அமைப்பு அல்ல என்பதும் உண்மைதான்
எனினும் இதில் பல துணைக் குழுக்கள் உள்ளன. தினசரி அடிப்படையில் இந்த நாடுகள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
3 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago