வகுப்பறையில் கைத்துப்பாக்கிகளை அனுமதிக்கும் டெக்சாஸ் பல்கலைக்கழகம்

By ஏபி

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கைத்துப்பாக்கிகளை வைத்துக் கொள்ள புதிய உத்தரவு ஒன்று அனுமதி அளித்துள்ளது.

முந்தைய சட்ட விதிகளின் படி டெக்சாஸ் பல்கலைக் கழகம் துப்பாக்கிகள் அற்ற இடமாக இருந்து வந்தது. ஆனால் குடியரசுக்கட்சி ஆதிக்கம் செலுத்தும் சட்ட மன்றம், உரிமம் வைத்திருப்பவர்கள் பொதுப்பல்கலைக் கழகங்களில் கைத்துப்பாக்கிகளை எடுத்துச் செல்லும் உத்தரவுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதனையடுத்து மீண்டும் துப்பாக்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்கலைத் தலைவர் கிரேக் ஃபென்வீஸ் கூறும்போது, “கைத்துப்பாக்கிகள் பல்கலை. வளாகத்தில் தேவையற்றது. எனவே இந்த புதிய அனுமதி எனக்கு மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

துப்பாக்கிகள் வைத்துக் கொள்வதற்கான உரிமைகள் பேசும் குழுவினர் இரண்டாவது சட்டத்திருத்தங்களின் படி தற்காப்பு விஷயமாகவே இந்த அனுமதியை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தனியார் கல்லூரிகள், பள்ளிகள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி மறுக்கலாம். ஆனால் பொதுப்பல்கலைக் கழகங்களில் துப்பாக்கி வைத்துக் கொள்ள இப்போது சட்டம் அனுமதித்துள்ளது. எனவே வளாகத்துக்குள் துப்பாக்கி வைத்துக் கொள்ளக் கூடாது என்று தடை செய்தால் அது சட்ட விரோதமாகும்

ஆனாலும் கைத்துப்பாக்கிகளை மறைத்தே வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவும் இதில் உள்ளது.

கைத்துப்பாக்கிகள் யாரிடம் இருக்கிறது என்று தெரியாத நிலையில் சுதந்திரமாக கருத்துகள் தெரிவிக்கும் சூழலுக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று சில மாணவ அமைப்புகள் இந்த உத்தரவை எதிர்த்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

32 mins ago

உலகம்

1 hour ago

உலகம்

3 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்