தலிபான் தலைவர்களுடன் சீன, ரஷ்ய, பாக்., சிறப்புத் தூதர்கள் சந்திப்பு

By செய்திப்பிரிவு

தலிபான் தலைவர்களுடன் சீன, ரஷ்ய, பாகிஸ்தான் சிறப்புத் தூதர்கள் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர்.

முன்னதாக இன்று, புதிய ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் சார்பில் முஹம்மது சுஹைல் ஷாஹீனை தலிபான்கள் நியமித்துள்ளனர்.

மேலும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் ஆப்கன் பங்கேற்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை பெறவும், உலகம் ஏற்கும் நாடாக ஆப்கனை உருவாக்கவும் அவர்கள் விரும்புவதை உலகுக்கு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலிபான் தலைவர்களுடன் சீன, ரஷ்ய, பாகிஸ்தான் சிறப்புத் தூதர்கள் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர்.
ஆப்கன் தலைநகர் காபூலில் பிரதமர் முகமது ஹசன் அகுந்த், வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, நிதியமைச்சர் மற்றும் பல அதிகாரிகளுடன் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இதனை, சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் உறுதிப்படுத்தியுள்ளார்.

தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகி ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்ரேஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆப்கன் சார்பில் ஐ.நா. கூட்டத்தில் தான் பங்கேற்று உரையாற்ற அனுமதி கோரி கோரிக்கையை விடுத்துள்ளார். ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், முத்தாகியின் கடிதம் வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், தலிபான் தலைவர்களுடன் சீன, ரஷ்ய, பாகிஸ்தான் சிறப்புத் தூதர்கள் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர். இருப்பினும் நடப்புக் கூட்டத்தில் தலிபான்களுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

மேலும்