புதிய ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் சார்பில் முஹம்மது சுஹைல் ஷாஹீனை தலிபான்கள் நியமித்துள்ளனர். மேலும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் ஆப்கன் பங்கேற்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை பெறவும், உலகம் ஏற்கும் நாடாக ஆப்கனை உருவாக்கவும் அவர்கள் விரும்புகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள் வசம் தற்போது ஆப்கானிஸ்தான் வந்துவிட்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியவுடன் ஆப்கானிஸ்தானை தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி காபூல் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் வெளியேறியது குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகின. இறுதியாக அஷ்ரப் கனி குடும்பத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்ததும் உறுதியானது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் வசம் வந்தது. அதன்பின்னர் 70க்கும் மேற்பட்டோர் கொண்ட இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்தனர். நவீன அரசாக அமைக்கா விட்டாலும் தலிபான்கள் உலக அளவில் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்பட விரும்புகின்றனர்.
» அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி: குவாட் மாநாடு, ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கிறார்
» கரோனா; சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,01,989: கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு குறைவு
இதன் ஒரு பகுதியாக தோஹாவைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீனை ஆப்கானிஸ்தானின் ஐ.நா. தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டம் செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதில் சுஹைல் ஷாஹீன் பங்கேற்கவும், வெளியுறவு அமைச்சர் உரையாற்றவும் தலிபான்கள் விரும்புகின்றனர்.
இதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை பெறவும், உலகம் ஏற்கும் நாடாக ஆப்கனை உருவாக்கவும் அவர்கள் விரும்புகின்றனர்.
தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகி ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆப்கன் சார்பில் ஐ.நா. கூட்டத்தில் தான் பங்கேற்று உரையாற்ற அனுமதி கோரி கோரிக்கையை விடுத்துள்ளார்.
குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், முத்தாகியின் கடிதம் வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்
ஆப்கனில் தலிபான்கள் அமைத்துள்ள அரசை ஏற்பது குறித்து ஐ.நா. இன்னமும் முடிவு செய்யவில்லை.
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கிய ஒன்பது பேர் கொண்ட ஐ.நா. குழுவுக்கு ஆப்கனின் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஐ.நா. கூட்டத்துக்கு முன்பாக இந்த விஷயத்தில் முடிவெடுப்பது சந்தேகமே.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago