ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வாங்க ஒப்பந்தம் செய்ததன் மூலம் நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக பிரான்ஸ் அரசு சாடியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் நேவல் குழுமத்திடமிருந்து அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல வாங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் நிமித்தமாகக் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாடுகள் தரப்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், திடீரென பிரிட்டனுடன் கைகோர்த்த ஆஸ்திரேலியா தனக்குத் தேவையான நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் பிரான்ஸ் அரசு மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளது.
இது குறித்து பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜீன் யிவெஸ் லே ட்ரியன் கூறுகையில், "இது முதுகில் குத்தும் செயல். நாங்கள் ஆஸ்திரேலியா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் துரோகம் செய்துவிட்டனர். நான் இன்று மிகவும் ஆத்திரத்தோடும், கசப்புணர்வோடும் இருக்கிறேன். நட்பு நாடுகளாக இருப்போர் ஒருவொருக்கொருவர் இத்தகைய செயலை செய்து கொள்ளக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸுடன் ஆஸ்திரேலியா மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் 50 பில்லியன் ஆஸ்திரேலியா டாலர் மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
13 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago