தடுப்பூசி போடாவிட்டால் வேலையில்லை என ஆணை பிறப்பித்துள்ள பிரான்ஸ் அரசைக் கண்டித்து அந்நாட்டு சுகாதார முன்களப் பணியாளர் ஒருவர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதல் கரோனா தொற்று பதிவானது. அதன் பின்னர் இப்போது உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 20 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா உருமாறி தற்போது டெல்டா வடிவத்தில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால், உலகம் முழுவதுமே தடுப்பூசித் திட்டம் சுறுசுறுப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பிரான்ஸ் நாட்டில் சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்திக் கொள்ளாதவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுகின்றனர். ஒரே நாளில் 3000 பேர் இவ்வாறாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சுகாதார அமைச்சர் ஒலிவியர் வெரான் பிறப்பித்தார்.
» நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்; எங்களுக்குள் எந்த கோஷ்டிப் பூசலும் இல்லை: தலிபான்கள்
» ஆப்கனில் மனிதாபிமான உதவிகளைத் தாராளமாகச் செய்யலாம்: ஐ.நா.வுக்கு தலிபான் பச்சைக்கொடி
இந்நிலையில் பிரான்ஸின் நைஸ் நகரத்தின் தியரி பேசன்ட் என்ற சுகாதார முன்களப் பணியாளர் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல. ஆனால், தடுப்பூசி செலுத்த காட்டப்படும் கெடுபிடி சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். ஒரே நாளில் 3000 சுகாதார முன்களப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago