ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்ட நிலையில் அங்கு அமெரிக்க ராணுவம் விட்டுவிட்டு வந்த ராணுவத் தளவாடங்களை தலிபான்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றை தலிபான்கள் பொம்மை போல் பாவித்து விளையாடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியான் ஜாவோ. அந்த ட்வீட்டில் அவர், பேரரசர்களின் மயானங்களும் அவர்களின் ராணுவ தளவாடங்களும்.
தலிபான்கள் அமெரிக்க ராணுவ விமானங்களை ஊஞ்சலாக, பொம்மைகளாக மாற்றிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதிலிருந்தே தொடர்ந்து அமெரிக்காவை சீனா கிண்டலடித்து வருகிறது.
இந்நிலையில் தான் ராணுவ விமானங்களை தலிபான்கள் பொம்மை போல் பயன்படுத்தும் வீடியோவை சினா வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது.ஆப்கானிஸ்தான் கடந்த 15 ஆம் தேதி தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
அதன் பின்னர், காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் அதிபர் பைடன் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் எனக் கூறியிருந்தார்.
அதன்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டன.
வெளியேறுவதற்கு முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஏவுகணை அழிப்பு அமைப்புகள் என மொத்தம் 73 வாகனங்களை அமெரிக்கப் படைகள் இனி பயன்படுத்தவே முடியாதபடி செயலிழக்கச் செய்துவிட்டே கிளம்பியது.
முக்கிய செய்திகள்
உலகம்
21 mins ago
உலகம்
1 hour ago
உலகம்
1 hour ago
உலகம்
14 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago