வியட்நாமில் தனிமைப்படுத்துதல் விதியை மீறி கரோனாவைப் பரப்பிய நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “வியட்நாம் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் கரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் 21 நாட்கள் விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்துதல் விதியை மீறியுள்ளார். இதனால் அவர் மூலமாக 8 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது.
இதில் ஒருவர் மரணமும் அடைந்துள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியட்நாம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் இதுவரை 5,40,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,000 பேர் பலியாகி உள்ளனர்.
» ரூ.200 கோடி மோசடி வழக்கு: ‘பிரியாணி’ பட நடிகை கைது
» செப்.7 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago