லிபிய முன்னாள் அதிபர் கடாபி மகன் சிறையிலிருந்து விடுதலை

By செய்திப்பிரிவு

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சாடி கடாபி சிறையிலிருந்து விடுதலையானார்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “லிபியாவில் புரட்சி ஏற்பட்டபோது கடாபியின் மகன் சாடி கடாபி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை லிபிய அரசு அவரை விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட சாடி கடாபி விமானம் மூலம் இஸ்தான்புல்லுக்குச் சென்றார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1969 முதல் 2011 வரை லிபியாவின் சர்வாதிகாரியாக முகமது கடாபி செயல்பட்டார். கடந்த 2011-ல் அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சொந்த ஊரான சிர்டேவில் பதுங்கியிருந்த கடாபியைப் புரட்சிப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

லிபியாவில் தற்போது ஏராளமான கிளர்ச்சிக் குழுக்கள் செயல்படுகின்றன. தலைநகர் திரி போலி 3 முக்கிய கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

லிபியாவில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும், வறுமையில் இருந்து விடுபடவும் பெரும்பாலான மக்கள் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்