ஆப்கானிஸ்தானில் அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆப்கான் ஊடகங்கள் தரப்பில், “ தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கும் அரசியல் உரிமை வேண்டும் இளம் பெண்கள் காபூலில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அதிபர் மாளிகையை நோக்கி செல்லவிடாமல் தலிபான்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சமூக செயற்பாட்டாளரான நர்கிஸ் என்பரை தலிபான்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. மேலும் பேரணியை கலைக்க வானை நோக்கி துப்பாக்கியால் தலிபான்கள் சுட்டனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு ஆப்கானில் உள்ள பெண்கள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும், பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர்.
முக்கிய செய்திகள்
உலகம்
24 mins ago
உலகம்
32 mins ago
உலகம்
5 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago