நியூஸிலாந்து வணிக வளாகத்தில் கத்திக்குத்தில் ஈடுபட்ட மர்ம நபர்: 3 பேர் கவலைக்கிடம்; மூவருக்கு லேசான காயம்

By செய்திப்பிரிவு

நியூஸிலாந்து நாட்டில் ஷாப்பிங் மால் ஒன்றில் மர்ம நபர் திடீரென பொதுமக்கள் மீது கத்திக்குத்து நடத்தியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐஎஸ் ஆதரவாளர்:

இந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வெறும் 60 விநாடிகளில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே போலீஸாரின் கண்காணிப்பில் இருந்த நபர் என்பதால் உடனடியாக போலீஸார் முடிவெடுத்து நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும், அந்த நவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "இது வெறுப்பின் வெளிப்பாடு. மிகவும் தவறான செயல். இதைச் செய்தவர் ஒரு தனிநபர். அவரை நாம் எந்த ஒரு மத நம்பிக்கையுடனும் தொடர்புபடுத்தாமல் இருப்போம். அவர் இலங்கையைச் சேர்ந்தவர். கடந்த 2011 ஆம் அண்டு இங்கு வந்தார். 2016 ஆம் ஆண்டு முதலே அவருடைய நடத்தையின் காரணமான அவர் போலீஸ் கண்காணிப்பில் இருந்தார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவர், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு அந்த அமைப்புடன் நேரடி தொடர்பு இல்லை. இருப்பினும், அவர் ஷாப்பிங் மாலில் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டதாலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்" என்றார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தாக்குதல் நடந்த வணிக வளாகத்தில் இன்னும் ஆயுதம் ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்து நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி இரண்டு மசூதிகளில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் 51 பேரை சுட்டுக் கொன்றார். அவர் வெள்ளையர். மற்ற இனத்தவர் மீது வெறுப்பு கொண்டவர்.

கடந்த மே மாதம் (2021 மே), டூண்டின் நகரில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில் 4 பேர் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று இன்னொரு வெறிச்செயல் அரங்கேறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்