அமெரிக்காவின் 20 வருடப் போர் நிறுத்தப் பிரச்சாரத்தால் ஆப்கானிஸ்தானில் சோகங்களும், இழப்புகளும் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் புதின் பேசும்போது, “20 ஆண்டுகால அமெரிக்காவின் போர் நிறுத்தப் பிரச்சாரத்தால் ஆப்கானிஸ்தானில் சோகங்களும், இழப்புகளும் மட்டுமே ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு எந்த அளவு இழப்பு ஏற்பட்டுள்ளதோ அதைவிட அதிகமாக ஆப்கன் மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் இருந்து வந்து ஒரு நாட்டில் அதிகாரத்தைச் செலுத்துவது முடியாதது” என்றார்.
ஆப்கனில் அமெரிக்காவின் அணுகுமுறை குறித்து புதின் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னணி:
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.
ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 mins ago
உலகம்
1 hour ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago