தலிபான் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவரை கடந்த 17-ம் தேதி நேர்காணல் செய்த டோலோ சேனலின் பெண் பத்திரிகையாளர் பேஹஸ்டா அர்கான்ட் நாட்டை விட்டு வெளியேறினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடிக்குள் முழுமையாக வந்துவிட்டதால், இனிமேல் பெண் பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் இருக்காது, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்த பஷேஸ்டா அர்காணட் ஆப்கனிலிருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் டோலோ சேனலில் அர்கான்ட் பணியில் சேர்ந்தார். ஆப்கனில் தலிபான்கள் பல்வேறு மாகாணங்களை கைப்பற்றியபின், தலிபான்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மவுலவி அப்துல்லாஹ் ஹேமத்தை கடந்த 17-ம் தேதி அர்கன்ட் நேர்காணல் செய்தார்.
» ஆப்கனிலிருந்து வெளியேறிவிட்டோம்; 20 ஆண்டு இருப்பு முடிந்தது; அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
» மலேசிய பிரதமர் தனிமைப்படுத்திக் கொண்டார்: தேசிய தினத்தில் இணையவழியில் பங்கேற்பார் என அறிவிப்பு
பெண்களுக்கு எந்தவிதமான உரிமையையும் வழங்காத தலிபான் தலைவரை அமரவைத்து ஒரு பெண் நேர்காணல் செய்தது உலகளவில் வைரலானது. அதிலும் குறிப்பாக, “ கடந்த ஆட்சியைப் போல் காபூல் நகரில் வீட்டுக்கு வீ்ட்டு சோதனை செய்யும் திட்டம் ஏதும் இருக்கிறதா” என்று துணிச்சலாக தலிபான் தலைவரிடம் அர்கன்ட் கேட்டது பெரும் வரவேற்பைப் பெற்றது.
உலகளவில் தலிபான் தலைவர்களில் ஒருவரை முதன்முதலில் நேர்காணல் செய்த முதல் பெண் பத்திரிகையாளர் எனும் பெருமையை அர்கன்ட் பெற்றார். உலகளவில் அர்கன்ட் புகைப்படமும், தலிபான் தலைவரை நேர்காணல் செய்தகாட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் உலகளவில் புகழ்பெற்ற அர்கன்ட் தலிபான்கள் ஆட்சிக்கு அஞ்சி, ஆப்கனை விட்டு வெளியேறியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கனைவிட்டு அர்கன்ட் வெளியேறிவிட்டார் என்பது சிஎன்என் சேனல் உறுதி செய்துள்ளது. அர்கன்ட் அளித்த பேட்டியில் “ ஆப்கனில் பெண்களுக்கான பாதுகாப்பு மேம்படும்போது, பாதுகாப்பு சூழல் மேம்பட்டால் நான் திரும்புவேன். தலிபான்கள் ஆட்சிக்கு அஞ்சி லட்சக்கணக்கான மக்களைப்போல் நானும் என் தேசத்தைவிட்டு புறப்பட்டுவிட்டேன்” எனத் தெரிவித்தார்.
டோலோ சேனலின் தலைநிர்வாக அதிகாரி சாத் மோஷேனி கூறுகையில் “ பெரும்பாலான புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள், நிருபர்கள் ஆப்கனைவிட்டு தலிபான்களுக்கு அஞ்சி வெளியேறிவிட்டார்கள். இதனால் புதியவர்களை நியமித்துள்ளோம். தலிபான் தலைவரை அர்கன்ட் நேர்காணல் செய்தது வரலாற்றுச் சிறப்பு. அதுமட்டுமல்லாமல் மலாலா யூசுப்பாயியையும் அர்கன்ட் இதற்கு முன் நேர்காணல் செய்துள்ளார். ஆப்கனில் முதன்முதலாக மலாலாவை நேர்காணல் செய்த சேனல் இதுதான்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago