ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க ராணுவத்தின் இருப்பு முடிந்துவிட்டது. அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கப்படும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய அதிபராகவந்த ஜோ பைடன், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மெரிக்க படைகள் முழுமையாக வெளிேயறத் தொடங்கியதையடுத்து, தலிபன்கள், பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றி, முழுமையாக தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கடந்த 15-ம் தேதி ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக ஆப்கன் வந்தது.
இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் வெளியேற வேண்டும் என்பதால், அந்தக் காலக்கெடு முடிவதற்கு முன்பே, அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம், காபூல் ஹமீது கர்சாய் விமானநிலையத்திலிருந்து வெளிேயறியது.
» மலேசிய பிரதமர் தனிமைப்படுத்திக் கொண்டார்: தேசிய தினத்தில் இணையவழியில் பங்கேற்பார் என அறிவிப்பு
ஆப்கனிலிருந்து அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம் வெளியேறிய சில மணிநேரத்துக்குப்பின் அதிபர் ஜோ பைடன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் எங்களின் 20 ஆண்டுகள் இருப்பை முடித்துக் கொள்கிறோம். அந்நாட்டிலிருந்து முழுமையாக அமெரிக்கப் படைகள் வெளியேறிவிட்டன. அனைத்து கமாண்டர்களின் முழுமையான பரிந்துரையின் அடிப்படையில் இந்த படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன, திட்டமிட்டப்பட அனைவரும் பாதுகாப்பாக வெளிேயற்றப்பட்டுள்ளனர்.
ஆப்கானைவிட்டு வெளியேற விரும்பும் மக்கள், அமெரிக்கர்கள், ராணுவத்தினர் அனைவரையும் இந்த திட்டத்தின் மூலம் முழுமையாக வெளியேற்றிவிட்டோம். ஆப்கானில் அமெரி்க்கர்கள் யாரேனும் இருந்தால், வேறு நாட்டவர்கள் வெளிேயற விரும்பினால், ஆப்கன் மக்கள் வெளியேற விரும்பினாலும் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு கேட்டுக்கொண்டேன்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சுதந்திரமும், சுதந்திரமாக வெளிேயறவும் உதவ தலிபான்களுக்கு தெளிவான செய்தியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆப்கனில் தங்கியிருக்கும் வெளிநாட்டு மக்கள் சுதந்திரமாக வெளியேற தலிபான்கள் எந்தவிதமான தடையும் விதிக்கக்கூடாது, மனிதநேய உதவிகளை மக்களுக்கு வழங்கவும் தடைவிதி்க்க கூடாது என்று தலிபான்களிடம் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
அனைத்து அமெரி்க்கர்களும் 3 விஷயங்களுக்காக நன்றியுடன், பிரார்த்தனை செய்யுங்கள். முதலில் நம்முடைய படைகள், அதிகாரிகள், காபூலில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினர், 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வான்வழியாக மீட்கப்பட்டனர்.
2வதாக, தன்னார்வலர்கள், மனிதநேயர்கள், ஆகியோர் ஆப்கனைவிட்டு வெளிேயற வேண்டும என்ற தேவையுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளிேயற்ற உதவி செய்தனர். 3-வதாக உலகளவில் அடைக்கலமாகச் செல்லும் ஆப்கன் மக்களை ஒவ்வொருவரும் தங்கள் நாட்டில் அன்புடன் உபசரிக்க வேண்டும், அடைக்கலம் வழங்கவேண்டும்
இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago