காபூல் விமான நிலையத்திற்கு வருவதற்கு தயாராக இருந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சீக்கியர்கள், இந்துக்களை தலிபான்கள் தடுத்து நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கன் மக்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என தலிபான்கள் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருந்தனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்து விமானங்களில் இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்த விமானத்தில் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கனைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
» மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்: கர்நாடக முதல்வர் தகவல்
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் சுமார் 200 இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பிற நாட்டு குடிமக்கள் உள்ளிட்டோர் இன்று காலைக்குள் ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வர தயாராக இருந்தனர். அப்போது தலிபான்கள் விமான நிலையத்தை நெருங்கியவர்களைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுபோலவே காபூல் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த 140 ஆப்கானிய சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்டோரை தலிபான்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை இந்திய உலக மன்றத்தின் தலைவர் புனித் சிங் உறுதிப்படுத்தினார். இதனால் காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த சிறப்பு இந்திய விமானப்படை புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கன் மக்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என தலிபான்கள் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago