தலிபான்கள் மீது தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள் குழு தீவிரவாத குழு என்பதில் ஐயமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று ஜி7 நாடுகளின் தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல், இத்தாலி பிரதமர், ஜப்பான் பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக சந்தித்து ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரூடோ, "கனடா எப்போதோ தலிபான்களை தீவிரவாதிகளை அறிவித்துவிட்டது. அவர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். அதனால் அவர்கள் மீது பல்வேறு தடைகளை விதிப்பது குறித்து நிச்சயமாக பரிசீலிக்கலாம்" என்று கூறினார்.
அதேபோல், ஜி7 மாநாட்டை ஒருங்கிணைக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள பிரிட்டனும், "தலிபான்கள் மீது உலக நாடுகள் ஏற்கெனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அதை விலக்குவதா வேண்டாமா என்பது குறித்து தலிபான்களின் போக்கை வைத்தே கணிக்க முடியும்" என்று கூறியுள்ளது.
இந்நிலையில், ஜி7 மாநாட்டில் ஆப்கானிஸ்தானில் வெளியேறும் நாளை ஆகஸ்ட் 31ஐ தாண்டி நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், ஆகஸ்ட் 31ஐ தாண்டி மேற்கத்திய படைகள் காபூலில் இருக்கலாம் என்று நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கு என்ன மாதிரியான ஆட்சி அமைப்பது என்பது குறித்து அவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆட்சி அமைப்பதில் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago