காபூல் விமானநிலையம் வரவேண்டாம் ஆப்கனில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதனைத் தொடர்ந்து ஏராளமானோர் காபூல் விமான நிலையத்தில் திரண்டனர். இதுவரை அமெரிக்க விமானங்கள் 13000 பேர் வரை ஆப்கனிலிருந்து வெளியேற்றியுள்ளது.

இந்நிலையில் அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை அமெரிக்கர்கள் காபூல் விமானநிலையத்துக்கு வர வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அமெரிக்கர்கள் காபூல் விமான நிலையம் வருவதைத் தவிர்க்கலாம் என்று கூறியுள்ளது.

முன்னதாக நேற்று பேசிய அதிபர் ஜோ பைடன், தலிபான் பிடியில் சிக்கிய ஆப்கனில் இருந்து அமெரிக்கர்களை மீட்பதுதான் இதுவரை நாடு சந்தித்ததிலேயே மிகக்கடினமான மீட்புப் பணி எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தலிபான் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு நாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பல்ல. மேற்கத்திய நாடுகள் தங்கள் மக்களை அப்புறப்படுத்தும் பணியை இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டு செய்திருக்கலாம்.

நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டவரையும் கடத்தவில்லை. விமான நிலையம் வரும் சிலரை மட்டும் விசாரித்தோம். அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் முன் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவே அந்த விசாரணையும் கூட என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

2 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

மேலும்