ஆப்கனின் வீழ்ச்சி புரியாத புதிர்: நாட்டைவிட்டு வெளியேறிய மத்திய வங்கி ஆளுநர் தகவல்

By செய்திப்பிரிவு

ஆப்கன் மத்திய வங்கியின் ஆளுநர் அஜ்மல் அஹமதி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் அந்நாட்டின் பண மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

அஹமதி தான் நாட்டைவிட்டு வெளியேறிய சூழல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விவரித்துள்ளார்.

அதில் அவர், "கடந்த ஞாயிறு காலை நான் வழக்கம்போல் பணியில் இருந்தேன். அன்று காலையில் இருந்தே தலிபான்கள் முன்னேற்றம் தொடர்பான செய்திகள் கவலை அளிப்பதாக இருந்தன. நான் வங்கியிலிருந்து வெளியேறினேன். அந்தத் தருணத்தில் எனது ஊழியர்களை மட்டும் அங்கேவிட்டுவிட்டு வெளியேறியவது கவலையை ஏற்படுத்தியது" என்று பதிவிட்டுள்ளார்.

ஆப்கன் ராணுவ விமானம் மூலம் அஹமதி சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார். அஹமதி உலக வங்கி, அமெரிக்கக் கருவூலம் போன்ற இடங்களில் பணிபுரிந்த அனுபவசாலி.

ஆப்கன் வீழ்ச்சி ஒரு புரியாத புதிர்:

அஹமதி மேலும் கூறுகையில், ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏன் தலிபான்களிடம் இவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்தனர் என்பது இப்போதும் புதிராகவே இருக்கிறது.

தலிபான்கள் முன்னேற முன்னேற ஆப்கானிஸ்தானின் சந்தை அச்சுறுத்தலுக்கு உள்ளானது. இதனால் ஆப்கனின் பணமான ஆஃப்கானியின் மதிப்பு சரிந்தது. முன்னதாக டாலருக்கு நிகரான ஆஃப்கானியின் மதிப்பு 86 ஆக இருந்த நிலையில், தலிபான்கள் ஆக்கிரமிப்பு தொடங்கிய பின் 100 ஆக சரிந்தது என அஹமதி குறிப்பிட்டிருக்கிறார்.

அதிபர் கனியின் திட்டமிடுதல் இன்மையும், அவரது ஆலோசகர்கள் அவரை சரியான பாதையில் வழிநடத்தாதும் அரசின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். ஆட்சி மாற்ற திட்டம் எதையும் ஏற்படுத்தாமல் நாட்டைவிட்டு வெளியேறிய அதிபர் கனி மன்னிக்க முடியாதவர்.

இவ்வாறு அஹமதி பல்வேறு ஊடகங்களும் அவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

மேலும்