ஜப்பானில் கனமழையைத் தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவு: 10 லட்சம் மக்கள் இடம்பெயர்வு

By செய்திப்பிரிவு

ஜப்பானில் கனமழைக் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் 10 லட்சத்துக்கான அதிகமானோர் தங்களின் இடங்களில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஜப்பானின் கிழக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்தது காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

கியுஷோ, ஹிரோஷிமா ஆகிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளம் காரணமாக இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானில் கனமழை காரணமாக 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 200 பேர்வரை பலியாகினர்.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகள் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்களை சந்திக்கின்றனர்.

இந்த நிலையில் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதைத் தடுக்க, உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் இறக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

உலகம்

12 days ago

மேலும்