ஆப்கானிஸ்தானின் ராணுவத் தளபதியை மாற்றி அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறுகிய காலத்தில் 9 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். குண்டூஸ், தலூக்கான், ஷேபேர்கான், ஜரான்ஜ், சமங்கன், ஃபாரா உள்ளிட்ட 9 மாகாணங்களை தலிபான்கள் வசம் சென்றுவிட்டது.
» கிரீஸ் காட்டுத் தீ: மன்னிப்பு கேட்ட பிரதமர்
» தலிபான்களிடம் சரணடையும் ஆப்கன் ராணுவ வீரர்கள்; அச்சுறுத்தல் நிறைந்த பகுதிக்கே நேரில் சென்ற அதிபர்
ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் தலிபான்களிடம் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சரணடைந்தனர்.
இந்நிலையில், நாட்டின் ராணுவத் தளபதியை அதிபர் அதிரடியாக மாற்றியுள்ளார். ஆப்கன் சிறப்பு தாக்குதல்கள் படையின் தளபதியாக இருந்த ஹிபதுல்லா அலிசாய் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனரல் வாலி அஹமத்சாய் விடைபெறுகிறார்.
இதனை டோலோ நியூச் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago