பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை கடக்கும் சூழல் ஏற்பட்டால் மனித இனம் வாழ்வதற்கான சூழல் இல்லாமலாகிவிடும் என்று ஐபிபிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அரசுகளுக்கு இடையிலான குழு வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால நிலை மாற்றம் என்பது உண்மை என்றும், மனித நடவடிக்கைகளால் பூமியின் வெப்ப நிலை அதிகரிக்கிறது என்பதற்கு சந்தேகமில்லாத ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐபிபிசி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “
» தமிழகத்துக்கு ரூ.183.67 பற்றாக்குறை மானியம்: மத்திய அரசு விடுவிப்பு
» என்ன மூடத்தனமான பேச்சு இது? - மீரா மிதுனுக்கு எம்.எஸ்.பாஸ்கர் கண்டனம்
பூமியின் வெப்ப நிலை 1.1 டிகி செல்சியஸாக அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2040 ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்துவிடும். பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை தாண்டினால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு மனித இனங்களும், பிற உயிரினங்களும் வாழ முடியாத கடினமான சூழல் உருவாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பூமியில் கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வு அதிகரிக்கும் பட்சத்தில் பூமியின் நில அமைப்பும், கடலும் கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கும் திறனை இழக்கும். இதனால் கடல், பனிப்பாறைகள், கடல் நீர்மட்ட உயர்வில் ஏற்படும் மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத நிலை உண்டாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தியாவை பொறுத்தவரை கால நிலை மாற்றத்தின் காரணமாக வருகின்ற பத்தாண்டுகளில் வெப்ப அலைகள், வறட்சி, மழை பொழிவு, சூறாவளிகளை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago