கிரீஸில் 7 நாட்களாகத் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ

By செய்திப்பிரிவு

கிரீஸில் தொடர்ந்து 7-வது நாளாகக் காட்டுத் தீ பரவி வருகிறது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் அதன் தீவுப் பகுதிகளில் கடந்த 7 நாளாக காட்டுத் தீ பரவி வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.

தொடர்ந்து எரியும் காட்டுத் தீ காரணமாகப் பல சுற்றுலாத் தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுப் பகுதியில் பரவிய தீ மக்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன. ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது” என்று செய்தி வெளியாகியுள்ளது.

காட்டுத் தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவில் நிலங்கள் நாசமாகியுள்ளன.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்