தொடரும் தலிபான்கள் அட்டூழியம்: மீண்டும் ஒரு இளம்பெண் கொலை

By செய்திப்பிரிவு

ஆப்கனில் ஆடையை இறுக்கமாக அணிந்ததற்காகப் பெண் ஒருவர் தலிபான்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரேடியோ ஆசாதி வெளியிட்ட செய்தியில், “ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் 21 வயதான இளம்பெண் ஒருவர் ஆடையை இறுக்கமாக அணிந்ததற்காக கொல்லப்பட்டார். தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சமர் கிராமத்தில் இந்தப் படுகொலை நடந்துள்ளது. கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் நசானின். அவர் தனது வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது தலிபான்கள் அவரைக் கொன்றுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். கடந்த வாரம் ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர் நசார் முகமத் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவங்கள் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இளம்பெண் ஒருவரை தலிபான்கள் கொலை செய்தனர். மேலும், ஆப்கானிஸ்தானின் அரசு ஊடக மையத் தலைவர் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் ஒரு இளம்பெண் தலிபான்களால் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருவதால், ஆப்கன் மீதும் பொதுமக்கள் மீதும் தலிபான்கள் தங்களது தாக்குதலை அதிகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 mins ago

உலகம்

50 mins ago

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

உலகம்

14 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்