ஜெஃப் பெஸோஸை பின்னுக்குத் தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரரானார் பெர்னார்ட் அர்னால்ட்

By செய்திப்பிரிவு

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் லூயி உய்ட்டன் நிறுவன உரிமையாளர் பெர்னார்ட் அர்னால்ட்.(72) இதுவரை ஜெஃப் பெஸோஸ் இந்த இடத்தில் இருந்தார்.

இவருக்குச் சொந்தமான 70 பிராண்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

லூயி உய்ட்டன் எனும் ஆடம்பர பொருட்களின் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 198.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை அவ்வப்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது 72 வயதான பெர்னார்ட் அர்னால்ட் உலகப் பணக்காரர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பட்டியல் வெளியிடுவதால், பணக்காரர்கள் தரவரிசைப் பட்டியல் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் 194.9 பில்லியன் டாலர்களுக்கு அதிபதியாக உள்ளார். 2020 ஆம் ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளும் லாக்டவுனில் இருந்தபோது ஆன்லைன் வர்த்தகம் வாயிலாக 38% வருவாய் ஈட்டியுள்ளது அமேசான்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லாவின் எலோன் மஸ்க் 50வது இடத்தில் இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்