தெற்காசிய நாடுகளில் டெல்டா வைரஸ் காரணமாக இந்தோனேசியா தீவிரமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,747 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “டெல்டா வைரஸ் பரவல் காரணமாக இந்தோனேசியாவில் கரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. தெற்காசியாவில் கடந்த வாரம் கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தோனேசியா கருதப்படுகிறது.
நேற்று மட்டும் கரோனாவால் 35 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,746 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய உயிரிழப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் கரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை இந்தோனேசியாவில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
» நான் மேதில் தேவிகாவின் கணவர் அல்ல: மலையாளத் தயாரிப்பாளர் காட்டம்
» ஒலிம்பிக் பதக்கம்: ஹரியாணாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.2.5 கோடி ரொக்கப் பரிசு அறிவிப்பு
கரோனா பரவல் குறித்து ஜகார்த்தாவில் வசிக்கும் ரோமி ஸ்டிஃபனஸ் கூறும்போது, “பிறப்பதும் இறப்பதும் வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆனால், அரசு இன்னும் திறமையாகக் கையாண்டால் இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா, இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago