எகிப்தில் 149 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து

By ஏஎஃப்பி

எகிப்தில் 149 பேருக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று அதிரடியாக ரத்து செய்தது.

எகிப்தில் கடந்த 2013-ம் ஆண்டு அதிபர் மோர்சியை அகற்றிவிட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றி யதும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் அந்நாடு முழுவதும் கலவரம் பரவியது. தலைநகர் கெய்ரோவில் போராட்டக்காரர்களின் முகாம் களுக்குள் புகுந்த போலீஸார், எதிர்த்து நின்ற 700-க்கும் மேற்பட் டோரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் கடும் ஆவேசமடைந்த மோர்ஸியின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களை குறிவைத்து தாக்கு தல் நடத்தினர். இதில் போலீஸ் உயரதிகாரிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் வன்முறை கும்பலைச் சேர்ந்த 149 பேருக்கு ஒட்டுமொத்தமாக மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் சார்பில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. மனுவை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்பை முழுமையாக ரத்து செய்தது. போலீஸாரின் அராஜகம் காரணமாகவே வன்முறை நிகழ்ந் திருப்பதால், இவ்வழக்கை மீண்டும் தொடக்கத்தில் இருந்து விசாரிக் கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப் பால் மனித உரிமை ஆர்வலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

17 mins ago

உலகம்

9 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்