இஸ்ரேலுக்கு உளவுப் பார்த்த நபர் ஈரானில் கைது

இஸ்ரேலுக்காக உளவுப் பார்க்கப்பட்ட ஒருவரை தங்கள் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் தரப்பில், “இஸ்ரேலுக்காக உளவுப் பார்க்கப்பட்ட ஒருவர் ஈரான் பாதுகாப்புப் படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து ஆயுதங்களும் கைபற்றப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

ஈரானின் குற்றச்சாட்டுக்கு இதுவரை இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த இரு வாரங்களாக தண்ணீர் பற்றாகுறை காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன, இந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இருப்பதாக ஈரான் குற்றம் சுமத்தியது இந்த நிலையில் இந்த அறிவிப்பை ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம், உலகம் முழுவதும் உள்ள மனித உரிமைப் போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரின் பேரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இது தொடர்பான விசாரணையில், வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன், தி வயர் ஆகிய ஊடக நிறுவனங்களும் ஈடுபட்டன. இதில் பலரின் ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியா, சவுதி அரேபியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இந்த மென்மொருளைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்துள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE