பாரத் பயோடெக் நிறுவனம், பிரசேலில் உள்ள தனது கூட்டுநிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் நடத்தப்பட இருந்த கிளினிக்கல் பரிசோதனையை பிரசேில் அரசு ரத்து செய்துள்ளது.
பிரசேில் நாட்டில் உள்ள பெர்சியா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் மருந்தை சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால், 2 கோடி கோவாக்சின் மருந்து சப்ளை செய்வது தொடர்பாக பிரேசில் நிறுவனத்துடன் 32.4 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனத்துடனான 32.4 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்தது.
இதன் காரணாக அதிருப்தியில் இருந்த பாரத் பயோடெக் நிறுவனம், பிரேசிலின் பெர்சியா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நேற்று திடீரென ரத்து செய்தது.
இது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ பாரத் பயோடெக் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனம், பிரேசிலின் பெர்சியா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்கிறது. பிரேசிலின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான அன்விசாவுடன் தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம் செயல்பட்டு, கோவாக்சின் மருந்துக்கு ஒப்புதல் பெற முயற்சிக்கும்.” எனத் தெரிவித்திருந்தது.
ஆனால், எந்தக் காரணத்துக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்தது என்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் பிரேசில் நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவாக்சின் மருந்தை கிளினிக்கல் பரிசோதனையை பிரேசில் அரசு ரத்து செய்துள்ளது.
இது குறித்து பிரசேலின் மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்பான அன்விசா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது “ பிரேசில் நாட்டில் கோவாக்சின் தடுப்பூசியின் கிளினிக்கல் பரிசோதனை சஸ்பெண்ட் செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் உள்ள பெர்சியா மெடிகாமென்டோஸ் எனும் நிறுவனம்தான் பாரத் பயோடெக் நிறுவனம் கிளினிக்கல் பரிசோதனை நடத்த உதவி செய்தும், ஆய்வும் செய்தும், தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வந்தது.
அதுமட்டுமல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யவும், 3-வது கிளினிக்கல் பரிசோதனை நடத்தவும் ஏற்பாடுகளைச் செய்துவந்தது. ஆனால், இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட உடன், கிளினிக்கல் பரிசோதனைக்கான அனுமதியும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மறுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago