உலகப் பெரும் பணக்காரர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற தனது சொந்த ராக்கெட்டில் தனது விண்வெளிப் பயணத்தை முடித்துத் திரும்பியுள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட ராகெட்டில் ஜெஃப் பெஸோஸ், அவருடைய சகோதரர் மார்க் பெஸோஸ், சிறப்பு கவுரவ விருந்தினராக வேலி ஃபங் என்ற விண்வெளி வீராங்கனை மற்றும் ஆலிவர் டீமன் என்ற பணக்காரர் ஆகியோர் பயணப்படனர். இவர்களில் வேலி ஃப்ங் 82 வயது நிரம்பியவர். ஆலிவர் பதின்ம வயதைக் கடக்காதவர்.
அவர் தனது அனுபவப் பகிர்வு குறித்து கூறியுள்ளதாவது:
விண்வெளிக்குச் சென்று திரும்பும் ஒவ்வொரு விண்வெளி வீரருமே அந்தப் பயணம் தங்களை மாற்றிவிட்டதாகக் கூறுவர். பூமியின் அழகு ஆச்சர்யமும், வியப்பும் தந்ததாகக் கூறுவர். நானும் அதை அமோதிக்கிறேன். பூமியில் இருந்து பார்க்கும்போது வளிமண்டலம் மிகவும் பெரிதாகத் தெரிர்யும். ஆனால், உயரே செல்லச் செல்ல அது மிகவும் மெலிதானதாகத் தெரிகிறது. பலவீனமதுபோன்று தெரிகிறது. நாம் நமது கிரகத்தை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் கண்ணால் பார்ப்பது வேறு, நம் அகக் கண்ணால் உணர்வது மற்றொன்று.
இவ்வாறு பெஸோஸ் மிகவும் நெகிழ்ச்சியாக தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மீண்டும் விண்வெளிக்குப் பயணப்படுவீர்களா என்ற கேள்விக்கு வெகு நிச்சயமாக என்று பெஸோஸ் பதிலளித்துள்ளார்.
» சொந்த ராக்கெட்டில் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பினார் அமேசானின் ஜெஃப் பெஸோஸ்
» கரோனா பரவலால் கடைசி நேரத்தில் ஒலிம்பிக் ரத்து செய்யப்படுமா? போட்டித் தலைவர் மூட்டோ சொல்வதென்ன?
அவருடன் பயணித்த 82 வயது வேலி பங்க், மிகவும் அற்புதமான பயணம். நாங்கள் பயணத்தை ரசித்தோம். இன்னொரு முறை செல்ல வேண்டும் என்று கூறினார்.
10 நிமிட பயணத்தில் பல சுவாரஸ்யங்கள்..
10 நிமிடங்களே நீடித்த பயணத்தில் குறிப்பிட்ட நிமிடத்தில் அனைவரும் தங்களின் பெல்ட்டுகளில் இருந்து விடுபட்டு ஜீரோ கிராவிட்டியை அனுபவித்தனர். அப்போது ஜெஃப் பெஸோஸ் சில் இனிப்பு மிட்டாய்களை சிதறவிட அதை இளைஞர் ஆலிவர் டீமன் தனது வாயால் கவ்வினார். இந்த வீடியோவை ப்ளூ ஆரிஜின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது சில நினைவுப் பொருட்களையும் இந்த 4 பேர் கொண்ட குழு கொண்டு சென்றது. அதில் ரைட் சகோதரர்களின் முதல் விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு பொருள், 1783ல் உலகின் முதல் ஹாட் ஏர் பலூன் பறந்தது. அதிலிருந்து செய்யப்பட்ட வெண்கல மெடல் ஒன்று மற்றும் அமெரிக்க விமானி எமீலியா இயர்ஹாட்டின் கண்ணாடி ஆகியனவற்றைக் கொண்டு சென்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago