உலகம் முழுவதும் ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் சர்வ தேச அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.
தென்அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் ஜிகா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் வகை கொசுக்கள் ஜிகா வைரஸை யும் பரப்பி வருகின்றன.
பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப் பாக வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, பார்வை குறைபாடு, மூளை, நரம்பு மண்டல பாதிப்புடன் குழந்தைகள் பிறக்கின்றன. சுமார் 4 ஆயிரம் குழந்தைகள் இத்தகைய பாதிப்பு களுடன் பிறந்துள்ளன. எனவே கருத்தரிப்பை தள்ளிப்போடுமாறு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெங்கு, சிக்குன்குனியாவை ஒப்பிடும்போது ஜிகா வைரஸால் ஏற்படும் உடல்நிலை பாதிப்பு மிகவும் குறைவு. எனினும் சில நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ள தாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
தென்அமெரிக்க நாடுகள் மட்டு மன்றி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட் டுள்ளது. கரீபியன் நாடுகளுக்கு சென்று திரும்பிய 2 ஆஸ்திரே லியர்களுக்கு ஜிகா வைரஸ் தொற்றியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சார்பில் ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் அவசர மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் மார்கரெட் சான் நிருபர் களிடம் கூறியதாவது:
தென் அமெரிக்காவில் ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் சுமார் 40 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சுகிறோம். ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கின்றன. அதற்கான சரியான காரணத்தை கண்டறிய முடிய வில்லை. எனவே இப்போதைக்கு கருத்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.
ஜிகா வைரஸ் பரவும் நாடுக ளில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக டாக்டர்களை அணுகி முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்வது அவசியம். உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைகள், கொசு விரட்டிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு சார்பில் சர்வதேச அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள் ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜிகா வைரஸ் பரவலை தடுக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் அவசர கால குழுவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு டேவிட் எல்-ஹேமன் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவி சுமார் 11 ஆயிரம் பேரை பலி கொண்டது. இப்போது ஜிகா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
40 mins ago
உலகம்
1 hour ago
உலகம்
3 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago