தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “ ஒரு தெளிவான செய்தி வந்து கொண்டிருக்கிறது.. அது என்னவென்றால் இந்தமுறை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 7 நாட்களாக 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அவர்களுக்கான வாய்ப்பு வரும்போது போட்டுக் கொள்ளுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
''டெல்டா வைரஸ் மிக மோசமான வைரஸ் என்பது தெளிவாகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவுவதை டெல்டா வைரஸ் அதிகப்படுத்தியுள்ளது. டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா சிறப்பாகச் செயல்படுகிறது'' என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி தெரிவித்தார்.
» இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டியது
» கோவிஷீல்டுக்கு பிரான்ஸ் ஒப்புதல்: பச்சைக்கொடி காட்டியுள்ள நாடுகளின் முழுமையான பட்டியல்
மேலும், அமெரிக்காவில் சில இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அமெரிக்காவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago