பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா குடலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது உடல் நிலை குறித்த பல்வேறு தகவல்கள் வந்த நிலையில், தான் நன்றாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறி இருப்பதாகவும், போல்சனோரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போல்சனோரா தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருந்தேன். ஆனால், தற்போது அறுவை சிகிச்சைக்கு அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு ஆதரவு தந்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பதவி ஏற்றது முதலே, ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல், முகக்கவசம் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஏற்கெனவே கூறிவந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
மேலும், கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டால் நீங்கள் முதலையாகவும் மாறலாம், பெண்களுக்கு தாடி வளரலாம் போன்ற கருத்துகளைப் பொதுவெளியில் பேசிவந்தார்.
உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கரோனா காரணமாக பிரேசிலில் வறுமை அதிகரித்து வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
48 mins ago
உலகம்
4 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago