பிற வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகளை அனுமதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அரசுத் தரப்பில், “பிற வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகளை ரஷ்யாவுக்குள் அனுமதிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. எங்களிடம் சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி உள்ளது. ஸ்புட்னிக் தவிர்த்து மூன்று கரோனா தடுப்பூசிகளைப் பதிவு செய்து இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 791 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய்த் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன. ஸ்புட்னிக் கரோனாவுக்கு எதிராக 91.6% சிறப்பாகச் செயலாற்றக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசி ஐரோப்பிய நாடுகளில் அனுமதிக்கப்படவில்லை.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யா ஆறாவது இடத்தில் உள்ளது. கரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்திவருவதே கரோனா பரவலுக்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் 20% மக்களுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago