தடுப்பூசி போடாவிட்டால் அரசு பணியில் தொடர முடியாது என பிஜி நாடு அறிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்துவதிலும், தயாரிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியில் கரோனா தடுப்பூசி போடாவிட்டால் அரசு வேலையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் பிராங்க் பைனிமராமா கூறியுள்ளதாவது:
» உத்தரகாண்டில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: கேஜ்ரிவால் அறிவிப்பு
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; இந்திய விளையாட்டு வீரர்களுடன் 13-ம் தேதி பிரதமர் மோடி உரையாடல்
கரோனா தடுப்பூசி போடாவிட்டால், அரசு வேலை இல்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும்.
ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். நவம்பர் 1-ம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டும். அப்படி செய்யவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago