ஹைதி அதிபர் ஜொவினெல் மொய்சே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”கரிபீயன் தீவில் அமைந்துள்ளது ஹைதி நாடு. இதன் அதிபர் ஜொவினெல் மொய்சே நேற்று துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜொவினெல் மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்” என்று செய்தி வெளியாகியுள்ளது.
ஹைதி அதிபர் கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹைதியின் தலைமை போலீஸ் அதிகாரி லியான் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லியான் சார்லஸ் கூறும்போது, “குற்றவாளிகளுடன் நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் சிலர் கொல்லப்பட்டனர். சிலரைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றோம். குற்றவாளிகளில் சிலர் ஸ்பானிஷ் மொழி பேசினர்” என்று தெரிவித்துள்ளார்.
ஹைதி அதிபர் ஜொவினெல் மொய்சே மீது எழுந்த ஊழல் புகாரை முறையாக விசாரிக்க வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு. வந்தன.
மேலும், ஹைதி நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மக்கள் தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸில் திரண்டு அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமும் வன்முறையில் முடிந்தது. இதன் காரணமாக ஜொவினெல் அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago