அமெரிக்க அதிபரான பின்னர் முதன் முறையாக முஸ்லிம் வழிபாட்டுத்தளமான மசூதிக்கு செல்கிறார் ஒபாமா.
அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்க முஸ்லிம்கள் தாங்கள் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்து வருவதாக கூறும் வேளையில் ஒபாமாவின் இந்த மசூதி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பால்டிமோர் இஸ்லாமிக் சொசைட்டிக்கு சென்றுவிட்டு அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அவர் செல்கிறார். கடந்த வாரம் இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் ஒபாமா உரையாற்றினார். இஸ்ரேல் துணைத் தூதரகத்தில் பேசிய அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா தனதாக்கிக் கொண்டார்.
தற்போது அவரது மசூதி பயணம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வட்டாரம் கூறும்போது, "அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக சகிப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், அரசியல் களத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றத்தை நோக்கிச் செல்கிறார் ஒபாமா" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இஸ்லாமிய தொடர்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ரஹிம் ஹூப்பர் கூறும்போது, "அதிபர் ஒபாமாவின் இத்தகைய நடவடிக்கைகள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
47 mins ago
உலகம்
2 hours ago
உலகம்
3 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago