சீனாவின் சினோவாக் கரோனா தடுப்பூசிக்கு தென் ஆப்பிரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்காவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “தென் ஆப்பிரிக்காவில் நாள்தோறும் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர சீனாவின் சினோவாக் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60,000 பேர் வரை பலியாகி உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் 3.3% பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
» பொம்மலாட்டத்தின் வழி வெண்புள்ளிகள் விழிப்புணர்வு!
» கரோனா தடுப்பூசி செலுத்திய கவுன்சிலர்: சிக்கலில் திரிணமூல் காங்கிரஸ்
கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜோகன்ஸ்பெர்க் போன்ற முக்கிய நகரங்களில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாக தென் ஆப்பிரிக்க மருத்துவ கவுன்சில் வருத்தம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென் ஆப்பிரிக்கா அறியப்படுகிறது. ஆப்பிரிக்காவில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்
முக்கிய செய்திகள்
உலகம்
38 mins ago
உலகம்
6 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago