அமெரிக்காவின் அழுத்தம் சீனாவுடனான எங்கள் உறவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீன செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்த நேர்காணலில் கூறும்போது, “அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எங்களைப் போன்ற நாடுகளை அவர்களுக்கு சாதகமாக்க நினைப்பது நியாயமற்றது.
நாங்கள் அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவில் இருக்கிறோம். சீனாவுடன் நாங்கள் கொண்ட நட்புறவு ஆழமானது. பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு அரசாங்கங்களுக்கு இடைப்பட்டது அல்ல.
மக்கள் - மக்கள் தொடர்புடையது. அமெரிக்கா போன்ற நாடுகள் எங்கள் மீது அளிக்கும் அழுத்தம் ஒருபோதும் சீனாவுடனான எங்கள் உறவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. என்ன நடந்தாலும் எங்கள் உறவில் மாற்றம் இருக்காது. சீனா - பாகிஸ்தான் உறவு நன்கு வலுவடைந்துள்ளது. ” என்றார்.
கரோனா தொற்று மற்றும் உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக சீனா மீது சர்வதேச அளவில் அமெரிக்கா கடுமையான விமர்சனங்களைக் தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
27 mins ago
உலகம்
2 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago