சவுதி மருத்துவமனை தீ விபத்தில் 31 பேர் பலி; 107 பேர் படுகாயம்

By ஏஎஃப்பி

சவுதி அரேபியாவின் ஜாஸன் பகுதி மருத்துவமனையில் நேற்று நேரிட்ட தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 107 பேர் பலத்த காயமடைந்தனர்.

அதிகாலை 2.30 மணி அளவில் மருத்துவமனையில் தீ விபத்து நேரிட்டுள்ளது. இதில் முதல் தளத்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு ஆகியவை கடுமையாக சேதமடைந்தன.

சம்பவ இடத்துக்கு 20 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 107 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிட மாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணமாக உடனடியாக தெரியவில்லை. இது குறித்து சவுதி அரேபிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததே தீ விபத்துக்கு காரணம், அந்த மருத்துவமனைக்கு அரசு எவ்வாறு அங்கீகாரம் அளித்தது என்று ஒருதரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று சவுதி அரேபிய சுகாதாரத் துறை அமைச்சர் காலித் அல்-பாலியா பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அடுத்தடுத்து சோகம்

கடந்த செப்டம்பர் 12-ம் தேதி மெக்கா பெரிய மசூதியில் கிரேன் சரிந்து 107 பேர் உயிரிழந்தனர். 238 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 24-ம் தேதி ஹஜ் புனித யாத்திரையின்போது மினா நகரில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 2400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரம் பேர் காயமடைந்தனர்.

சவுதி அரேபியாவில் அடுத்தடுத்து விபத்துகள் நேரிட்டு உயிர்கள் பலியாகி வருவது அந்த நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்