இதுவரை கண்டறியப்பட்ட கரோனா உருமாற்றங்களில் டெல்டாவே அதிக தொற்றுத்தன்மை கொண்டது: உலக சுகாதார அமைப்பு

By செய்திப்பிரிவு

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ்களில் டெல்டா வைரஸே அதிகம் தொற்று தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறும்போது, “ டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதை நன்கு அறிவோம். இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் டெல்டா வைரஸ்தான் அதிகம் தொற்று தன்மை கொண்டது. 85 நாடுகளில் டெல்டா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பூசி போடதவர்களிடம் டெல்டா வைரஸ் வேகமாக பரவுகிறது. தளர்வுகளை அறிவிப்பதால் உலகம் முழுவதும் தொற்று அதிகரித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறேம்

சில வளர்ந்த நாடுகள் கரோனா தடுப்பூசிகளை தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு மட்டுமே வைத்துக் கொண்டுள்ளன. இதன் காரணமாகதடுப்பூசிக்கு பெருமளவில் பற்றாக்குறை ஏற்பட்டது. இது மிகவும் கவலையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

உருமாறிய கரோனா வைரஸ்கள், கிரேக்க எழுத்துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து, உருமாறிய கரோனா வைரஸ்களுக்குப் பெயரையும் வெளியிட்டது.

மேலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு லாம்ப்டா என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்